மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது !

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது.

நவம்பர் 29,30, டிசம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில், அமெரிக்கா, கனடா, ஓஸ்றேலியா, பிரான்சு, ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து நா.க.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர். சமவேளை பிரித்தானியாவில் இருந்தும் காணொளிவழியே உறுப்பினர்கள் பங்கெடுக்கின்றனர்.

தமிழீழத்தை வென்றடைவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை
இந்திய பெருங்கடல் இந்தோ-பசுபிக் புவிசார் அரசியலும் தமிழர்களுக்கான வாய்ப்புக்களும்.. தமிழீழத் தேசக் கட்டுமானம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில் – பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆகிய தொனிப் பொருட்களை மையப்படுத்தி இந்த அமர்வு இடம்பெறுகின்றது.

தொடக்கநிகழ்வில் சுதந்திரத்துக்காக போராடி வரும் கத்தலோனியாவில் இருந்து அவர்கள் சிறப்பு அதிதியாக Jurdi Vilamova கலந்து கொண்டிருந்தார். சுவிசில் சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.

இதேவேளை அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை, கருத்தாடல், தீர்மானங்கள் என உட்பட பலவிடயங்கள் இவ்மூன்று நாள் அமர்வுகளில் உரையாடப்பட இருக்கின்றன.D2 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D3 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D4 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D6 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D8 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D9 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! D10 மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது !