மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று 23-11-2019, சனிக்கிழமை சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

maramavadi 1 மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள்வழமை போன்று இவ்வருடமும் கார்திகை 27,ம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்ஏற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருவம் நிலையில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த 2010,ம் ஆண்டுதொடக்கம் தொடர்ச்சியாக முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விளக்கேற்றி அஞ்சலி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

maramaavadi 11 மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள்