மாலைதீவில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசின் அரச தலைவர் மெஹமட் முஸ்விற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்றுவந்த பேச்சுக்களை தொடர்ந்து மாலைதீவில் இருந்து இந்திய படையினரை வெளியேற்ற இந்தியா சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்ரம்பர் மாதம் சீனா சார்பு அரசு மாலைதீவில் அமைந்ததுடன், தான் பதவிக்கு வந்தால் மாலைதீவில் நிலைகொண்டுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவேன் என மொஹமட் தெரிவித்திருந்தார்.
மாலைதீவுக்கு இந்தியா வழங்கிய கடல்பாதுகாப்பு விமானங்களை பரமரிப்பதற்காகவே இந்திய படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். உலகின் மிகவும் செலவுமிக்க உல்லாசப்பயணத்துறை நாடாக மாலைதீவு இருக்கின்றபோதும், அது பூகோள அரசியல் முக்கியத்துவம் வாய்ததாகவும் உள்ளது.
500 மைல்கள் சுற்றளவில் 1192 தீவுகள் பரந்துள்ள மாலைதீவை கடந்தே உலகின் கிழக்கு- மேற்கு கடல்பாதை அமைந்துள்ளது.
எனினும் துருப்புக்களின் வெளியேற்றத்திற்கான கால எல்லை வரையறுக்கப்படவில்லை.