மாலியில் தாக்குதல் – 49 பொதுமக்களும், 15 படையினரும் பலி

மாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ள படை முகாம் மற்றும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்ட படகு ஆகியற்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 49 பொதுமக்களும் 15 படையினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை (7) இடம்பெற்ற இந்த தாக்குதலில் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

காவே பகுதியில் மக்கள் பயணம் மேற்கொண்ட படகு மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அங்குள்ள படை முகாமையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களில் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலியில் அண்மையில் இடம்பெற்ற இராணுவப்புரட்சியை தொடர்ந்து பிரான்ஸ் படையினர் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.