மாற்றுத்தலைமை என்பது பிரியோசனமற்ற விடயமாகும் – சிவமோகன் வீடியோ இணைப்பு

மாற்றுத்தலைமை என்ற கோசத்தை வைத்தவர்கள ஆளுக்கொரு கட்சியை தொடங்கிக்கொண்டு இன்று உருக்குலைந்து நிற்கின்றார்கள். இது ஒரு பிரியேசனமற்ற விடயமாகும். என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியோகமாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்,

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் நகரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுவர்களில் ஒவியம் வரையும் செயற்பாடு ஒரு நல்ல விடயமாகும். எமது தமிழ் பிரதேசங்களில் எமது இளைஞர்கள் ஈடுபாட்டுடன் ஈடுபடுவது சிறந்த விடயம். ஆனால் எமது கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் மாற்றினத்தின் கலாச்சாரம் உள்நகர்த்தல் நடைபெறுவதாக தெரியவருகின்றது.

அவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தர் சம்மந்தமான சித்திரங்கள் கூட சில இடங்களில் வரையப்படுகின்றது. குட்சிகள் சம்மந்தப்பட்ட சித்திரங்கள் வரையப்படுகின்றது. எமது தமிழ் மக்களிடையே கட்சி சார்ந்த ஊடுறுவல்களும் எமது கலாச்சாரத்தை விலக்கி வேறு கலாச்சாரத்தை உள்நுழைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றுத்தலைமை என்ற கோசத்தை வைத்தவர்கள ஆளுக்கொரு கட்சியை தொடங்கிக்கொண்டு இன்று உருக்குலைந்து நிற்கின்றார்கள். இது ஒரு பிரியேசனமற்ற விடயமாகும். ஏதொவொரு வெளிசக்தி இவர்களை இயக்குவதாகவே சந்தேகபடுகின்றோம். வேறு பண மூலங்கள் மூலம் இவ்ர்கள் இயக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகமும் உண்டு.

மாற்றுத்தலைமை என்று கூறிக்கொண்டு எமது வட கிழக்கில் வாழாதவர்கள் எல்லோரையும் மாற்றுத்தலைமை என்று கூறிக்கொண்டு வருவதை எமது தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தலைமைகள் எமது வட கிழக்கு மாகாணத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி இல்லாத எந்த ஒரு தலைமைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. மாற்றுக்கட்சிகளிற்கு ஜனநாயக உரிமையுண்டு. மக்கள் முன் அவர்கள் தங்களது கொள்கைகளை முன்வைத்து செல்லலாம். வருகின்ற தேர்தலில் கூட செல்வார்கள் என்றாலும் மக்கள் சரியான தீர்மாணத்தை எடுப்பார்கள்.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் மீள்குடியேற்றம் என்ற பெர்வையில் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். நூன் அறிந்த வகையில் சுகாதாதுறையினர் மலேரிய தடை சம்மந்தப்பட்ட விடயங்களை மாத்திரமே சீராக செய்கின்றார்களே தவிர அவர்களிற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய விடயங்கள், அடிப்படை வசதிகள், இருப்பிட வசதிகள், காணி வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படவது இல்லை.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மீள்குடியேறி வர விரும்புபவர்கள் கூட வந்தவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்கள் மூலம் மீண்டும் மற்றவர்களை வரத்தூண்டாத நிலைதான் காணப்படுகின்றது. எமது மக்கள் அங்கிருக்கத்தேவையில்லை என்றாலும் இங்கு அழைத்துவர முன் மீள்குடியேற்ற நடைமுறை சீராக ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களிற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒவ்வொரு காலத்திலும் சரியான முறையிலே தீர்மாணங்களை எடுத்திருந்தது. 2015ல் ஒரு ஆட்சி மாற்றத்தின் பின் சுதந்திர ஆணைக்குழு 19வது திருத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அதன் கீழ் ஒரு ஜனநாயக சூழல் உருவாகயது.

ஆனால் இப்போது வந்த புதிய அரசாங்கம் 19வது திருத்தத்தை இல்லாது செய்வதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 19வது திருத்தத்தை இல்லாது செய்வத என்பது ஜனநாயகமற்ற அராஜக சூழலை இந்நாட்டில் உருவாக்கும் என்பது நிச்சயம்.

எனவெ இந்த விடயங்களை சிங்கள மக்கள் கருதடதில் கொள்கின்றார்களோ இல்லையோ நான் அறியேன். அவர்களிற்கு மூக்கு போனாலும் தமிழர்களுக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற முடிவுகளை அவர்கள் எடுக்கின்றார்களா என்று தெரியவில்லை. சிங்கள மக்கள் இந்த ஜனநாயக சூழல் உருக்குலைவதற்கு விடாத வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.