667 Views
பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை – உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உகண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் இன்று நடைபெறவுள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ்களை பெற வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது குறித்த மருத்துவர், மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 14, 17 மற்றும் 18 வயதான மாணவிகளே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.