மாங்குளத்தில் எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டன

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனைப் பகுதியில் நேற்று(12) மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்களை கொன்று இங்கு புதைத்திருக்கலாம். சிறீலங்கா அரசு இதை மூடிமறைக்கவோ அல்லது பலநூறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் எலும்புகள் தான் கிடைத்துள்ளன என திசை திருப்பவோ முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன என தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேவேளை மனித எலும்புகள் காணப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார், எலும்புக்கூடுகளை ஆய்வுக்குட்படுத்தி, இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாற்று மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும்வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.Tamil News large 2479646 மாங்குளத்தில் எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டன

Leave a Reply