மலேசியாவில் முதல் கோவிட் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டார்.

414 Views

மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, முதல் ஆளாக பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள், அகதிகள், சான்றிதழ் இல்லாத குடியேறிகள் உள்ளிட்ட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மலேசியா திட்டமிட்டதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகவே  கோவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

 தடுப்பூசியின் ஆற்றல்  மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக  முதல் ஆளாக முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மலேசியா தனது 33 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 83 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் ஓராண்டு காலத்துக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா மொத்தம் 25 மில்லியன் டோஸ் ஃபைசர் – பையோஎன்டெக் தடுப்பூசி மருந்தை  வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது 39% மக்களுக்குப் போதுமானது.

அத்துடன் பிரிட்டிஷ்-சுவீடன் மருந்து நிறுவனத்தின் 6.4 மில்லியன் அஸ்ட்ராஸெனகா, 12 மில்லியன் சீனாவின் சினோவாக், 6.4 மில்லியன்  ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 ஆகிய தடுப்பூசி மருந்துகளையும்  பெற்றுக்கொள்ள மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave a Reply