மலேசியாவில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் கைது

357 Views
மலேசியாவின் Sarawak பகுதியில் கடந்த மே 1 முதல் அக்டோபர் 18ம் தேதி வரை Op Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 497 சட்டவிரோத குடியேறிகளும் 28 படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேடுதல் நடவடிக்கையில் மலேசிய பாதுகாப்புப் படையினர், மலேசிய காவல்துறையினர், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை, மலேசிய சுகாதாரத்துறை, சுங்கத்துறை, குடிவரவுத்துறை, People’s Volunteers Corps உள்ளிட்டவை ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில் 56 சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply