மருந்தை பயன்படுத்திய பின்னரே கைதிகள் தங்களுக்குள் மோதினர் – அமைச்சர் விமல் கூறுகிறார்

322 Views

மருந்தைப் பயன்படுத்திய பின்னர் மஹர சிறைச்சாலை கைதிகள் சுயஉணர்வற்ற நிலையில் காணப்படுவதை காணொலிகள் காண்பித்துள்ளன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“மருந்தை உட்கொண்ட கைதிகள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டனர், தங்களுக்குள் மோதிக்கொண்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்தை பெருமளவுவில் பயன்படுத்தியதாலேயே இந்த நிலையேற்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து ஏன் சிறைச்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் அவசியம்” என்றார்.

Leave a Reply