மன்னாரில் 70,000 அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது

511 Views

மன்னார், தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமான டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.100 டொலர் அமெரிக்க நாணயத்தாள்கள் 706 உடன் இச்சந்தேகநபர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாராபுரம் சந்தி சோதனைச் சாவடியிலிருந்த படைத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய காவல் துறையினருடன் இணைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உந்துருளியில் சென்ற ஒருவரை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உந்துருளியில் இருக்கைக்கு அடியிலிருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியான 706 நாணயத்தாள்கள் இருந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தலைமன்னாரைச் சேர்ந்த19 வயதுடையவர் ஆவார்.இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த மற்றுமொருவர் அவருக்கு உதவி புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply