மத்தியஸ்தம் செய்ய தயார்: சீனா அறிவிப்பு

ஈரான் – பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், “பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி வழியில் கட்டுப்பாடுடன் நடக்கும் என்று சீனா நம்புகிறது.

நிலைமையை சீராக்க சீனா ஆக்கபூர்வமாக பங்காற்ற தயாராக இருக்கிறது. இரு தரப்பும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.