தமிழீழத்தில் தமிழீழ நடைமுறை அரசு இருந்த காலத்தில் தைத்திருநாள் மதசார்பற்ற தேசிய பெருவிழாவாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டுவந்தது.
இன்று தமிழ் மக்கள் கொண்டாடும் பெரும்பாலான பண்டிகைகள் ஆரிய, ஐரோப்பிய அல்லது அரேபிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்க, தைத்திருநாள் மாத்திரமே பண்டையத்தமிழரின் பண்டிகைகளில் தப்பிப் பிழைத்து நிற்கும் ஒன்றாக திகழ்கின்றது.
எனவேதான் தமிழீழ நடைமுறை அரசு அன்று தைத்திருநாளை தனது தேசிய பெருவிழாவாக முதன்மைப்படுத்தியிருந்தது. இதன் போது தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையாகும்.
உலகத் தமிழினம் தைத்திருநாளை இனத்தின் எழுச்சி மிக்க முதன்மைத் திருநாளாக முன்னிலைப்படுத்த முன்வரவேண்டும்.