மதம்,அரசியல் நிகழ்வுகளே இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்-WHO

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளே முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில், கொரோனா தொற்று 2,37,03,665 ஆக அதிகரித்து, உயிரிழப்பு 2,58,317  ஆக உயர்வடைந்துள்ளது.

 இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் கொரோனா தொற்று,பி -1.617 வகை தொற்றுக்கள் முதன் முதலில் கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்டன. தற்போது கொரோனா தொற்றும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது, பி.1.617 வகை கொரோனா தொற்று மற்றும் பிற கொரோனா தொற்று வகைகளின்( எ.கா.பி.1.617) தனித்தனி பங்குகள் என்ன என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் “இந்தியாவின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற்றதற்கும், அதைத் தொடர்ந்து அத்தொற்றின் பரவல் வேகமெடுத்ததற்கும் பல காரணங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதில், முக்கிய காரணங்களாக, மதம், சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் எவ்வித பொது சுகாதார மற்றும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாது மக்கள் ஒன்றுகூயதுதான் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.