365 Views
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் மதங்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவது போன்று சிறுபான்மை இன மத வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கடந்த வருடம் நான்கு மதங்களுக்குமான ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டினார்கள்.
பிரமாண்டமான முறையில் பௌத்த விகாரையும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான விடுதிகளும் அமைக்கப்பட்டுவருவதாகவும்,
தற்காலிக கொட்டில்களில் ஏனைய இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வழிபாட்டு இடங்கள் காணப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.