மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள்

388 Views

2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேவாலயமான மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டு.-அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருப்பலியினை ஆலயத்தின் பங்குத்தந்தை வி.எஸ்.அன்னதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்களும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.IMG 6476 மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள்

இந்த விசேட புது ஆண்டினை வரவேற்கும் திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆயரினால் புதிய ஆண்டினை வரவேற்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் மலரவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Leave a Reply