மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் பகுதியில் 4.65 றிச்சர் அளவுள்ள பூமி அதிர்வு உணரப்பட்டதாக இலங்கையின் பூகோள ஆய்வு மையம் இன்று(11) தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் வட கிழக்கு கடல்பகுதியில் கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் 24 கி.மீ ஆழத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இது உணரப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஆழிப்பேரலை ஏற்படும் அபாயங்கள் இல்லை என அது மேலும் தெரிவித்துள்ளது.