மட்டக்களப்பு- யாழில் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம்

174 Views

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG 0126 மட்டக்களப்பு- யாழில் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம்

சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 அம்ச கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2021 06 03 at 2.00.45 PM 1 மட்டக்களப்பு- யாழில் சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பு போராட்டம்

அது நேரம் யாழ்ப்பாணத்திலும் இன்று இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply