மட்டக்களப்பில் கல்வியில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் மாவட்டத்தில் முதல் நிலையினைப்பெற்றுள்ளனர்.

அத்துடன் வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தர பரீட்சையிபெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனித மைக்கேல் கல்லூரி பெருமளவான வெளியீடுகளைக்பெற்று முதல் இடம் வகிக்கின்றது.

புனித மைக்கேல் கல்லூரி மாணவன் மனோகிதராஜ் ஜுட் சுரன்ராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69வது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் இம்முறை மருத்துவதுறைக்கு பத்து மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொறியியல் துறைக்கு எட்டு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் சிவபாதசுந்தரம் ஜதுஷியன் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் மருத்துவதுறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Batti A L 2019 மட்டக்களப்பில் கல்வியில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்தான் சிறுவயது முதல் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் முயற்சிகளை மேற்கொண்டுவந்ததாகவும் இன்று அது நிறைவேறும் நிலையேற்பட்டுள்ளதாகவுமு; மனோகிதராஜ் ஜுட் சுரன்ராஜ் தெரிவித்தார்.

செங்கலடியை சேர்ந்த ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன்  விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37 இடத்தினையும் பெற்று தனது பெற்றோருக்கும் பாடசாலைக்கும்  மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.