மட்டக்களப்பில் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

623 Views

மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒ. எம்.பி அலுவலகத்திற்கு ஏதிராக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கட்டிடத்தில் இருந்து பகல் 1 மணிக்கு ஆரம்பித்து லொயிஸ் அவனியூர் ஊடாக நகர மணிக்கூட்டு கோபுரம் வழியாக மத்திய வீதியில் உள்ள ஒ. எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காணாமல் போன உறவுகள் கலந்து கொண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஐந்து பேரின் விபரங்களை ஒப்புதலுடன் பெற்றுக் கொண்ட ஓ.எம்.பி, ஆறு மாதம் கடந்தும் அதற்கு நீதிவழங்க முடியாத நீ மாவட்டம் தோறும் அலுவலகம் திறந்து எதைச் சாதிக்கப்பார்க்கிறாய் எனவம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் வெள்ளை வானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே? , நீ கொன்றாயா?, சர்வதேச விசாரணை வேண்டும், 6 ஆயிரம் ரூபா தேவையில்லை , புதிதாக திருட்டுத்தனமாக திறக்கப்பட்ட ஒ.எம்.பி அலுவலகம் தேவையில்லை, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஓ.எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகார்கள் ஆர்ப்பாட்டத்தில் சில மணி நேரம் ஈடுபட்டு பின் அங்கிருந்து விலகிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
oiuj மட்டக்களப்பில் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Leave a Reply