மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம்

மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை, மாமூலை பகுதியில் இன்று இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கள் விற்பனை நிலையம் அமைந்திருந்த பகுதியில் ஆரம்பத்தில் குடியேற்றங்கள் இல்லாதிருந்த நிலையில், தற்போது புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறுபட்ட குற்றச்செயல்களும், சட்டவிரோத நடவடிக்கைகளும் தலை தூக்கியுள்ளன.

கள் விற்பனை நிலையத்திற்கு வருபவர்களால் தாம் பாதிக்கப்படுவதாகவும், இந்நிலையில் குறித்த விற்பனை நிலையத்தை மாற்றுமாறும் பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளருக்கு கையளிக்கும் வகையில் கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

b 1 மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம் b 2 1 மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம் b 3 மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம்