மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது-தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு

மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையகம் திறைசேரி நிறைவேற்று அதிகாரம்  அரச அச்சகர்  மற்றும் இலங்கை பொலிஸின் சிரேஸ்ட அ திகாரிகள் ஆகியோர் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக மீறியதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவரினதும் நடவடிக்கைகளை ஆராய்ந்ததில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை குழப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை புலனாகியுள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.