# பிரபாகரன் அந்த யுத்தத்தில் தனது மகனை களமிறக்கினார் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சார்ல்ஸ் அன்டனி அதி உச்ச பங்களிப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
# இறுதியாக மோதலின்போது கொல்லப்பட்ட சார்ல்ஸ் அன்டனியின் உடலை இராணுவம் கண்டுபிடித்தது.
# யுத்தத்தின்போது யோசித எங்கிருந்தார் என்பதே தெரியாது, அவர் யுத்தகளத்தில் கால் வைத்தமைக்கான அறிகுறியே இல்லை,
# யுத்தத்திற்காக பிரபாகரன் தனது மகனை தியாகம்செய்தார்,யோசித யுத்த களத்திற்கு அருகில் கூட வரவில்லை.
# யோசித ராஜபக்சவினதும், சார்ல்ஸ் அன்டனியின் அத்தியாயங்கள் தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு என்ற விடயங்களில் பிரபாகரனிற்கும், மகிந்தராஜபக்சவிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை வெளிப்படுத்துகின்றன.
* ‘பிரபாகரன் தனது சமூகத்திற்கு ஓருபோதும் துரோகமிழைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. பிரபாகரனின் நிலைப்பாட்டிற்கு மாறாக மகிந்தவின்போலியான தேசப்பற்று தெளிவாக வெளிப்பட்டுள்ளது.’
*’தாங்கள் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் பிரபாகரன் யுத்த களத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு இணங்குகின்றார் இல்லை என சார்ல்ஸ் அன்டனி கேபியிடம் குறிப்பிட்டுள்ளார். இது விடுதலைப்புலிகள் அமைப்பிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.’
குறிப்பு – உப்புல் ஜோசப் பெர்னாண்டோ என்ற சிங்களப் பத்திரிகையாளர் Ceylon Today யில் முன்னர் எழுதியிருந்த கட்டுரையின் முக்கிய பகுதிகள்