மகனைத்தேடி போராடி வந்த தந்தை மரணம்- தொடரும் துயரம்

405 Views

வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.  

வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.  இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் .

b00f4d75 fdcb 48cc a8d7 63d3da5db1d5 மகனைத்தேடி போராடி வந்த தந்தை மரணம்- தொடரும் துயரம்

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply