போதைப் பொருள் கடத்தியவர்கள் மட்டக்களப்பில் கைது

314 Views

வடக்கில் இருந்து கிழக்கிற்கு போதைப்பொருட்கள் கடத்திய குழுவினரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெண்டீஸ் தலைமையில் இயங்கிவரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

IMG 6284 போதைப் பொருள் கடத்தியவர்கள் மட்டக்களப்பில் கைது

கைதுசெய்யப்பட்டர்கள் வடக்கில் இருந்து தொடர்ச்சியாக போதைப்பொருளை கடத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply