பொருளாதார நெருக்கடி – மதுபானங்களை அதிகம் பருகுமாறு யப்பான் அறிவுரை

105 Views

பொருளாதார நெருக்கடிகளால் யப்பானிய மக்கள் மது பானங்களை வாங்குவதை குறைத்து வருவதை தொடர்ந்து அதனை அதிகம் வாங்கி பருகுமாறு யப்பான் அரசு தனது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மது விற்பனை குறைந்து வருவதால் அரசுக்கு அதன் மூலம் கிடைக்கும் வரிப்பணம் குறைந்து வருகின்றது. எனவே இளைஞர்கள் மதுபானக் கடைகளுக்கு அடிக்கடி சென்று மதுபானங்களை அருந்த வேண்டும் என யப்பான் அரசின் திறைசேரி அறிவித்துள்ளது.

கோவிட்-19 நெருக்கடிகளை தொடர்ந்து மக்கள் மது அருந்துவதை குறைத்துள்ளனர். யப்பானில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் வைன் வகை மதுபானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. எனவே புதிய வகையில் மதுபானங்களை வடிவமைத்து அதனை சந்தைப்படுத்துவதற்கு 20 தொடக்கம் 39 வயதுவரையுள்ளவர்கள் தமது ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்.

மக்களை கவரும் வகையில் மதுபான விற்பனை விளம்பரங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் வீடுகளில் மக்கள் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என யப்பானின் தேசிய வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு அரசு பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது.

Leave a Reply