பொதுமக்களின் கருத்துகளை பிரதான ஊடகங்களால் மாற்ற முடியவில்லை – கனடா

நாடுகளில் உள்ள பிராதான ஊடகங்கள் பொதுமக்களின் கருத்துக்களில் மாற்றங்களை கொண்டுவருவதில் பிரதான பங்குவகித்து வந்திருந்தன. ஆனால் அவற்றை தற்போது சமூகவலைத்தளங்கள் முறியடித்துவருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த புதன்கிழமை(21) தெரிவித்துள்ளார்.

சி.பி.சி மற்றும் சி.ரி.சி போன்றவை எமது ஊடகங்கள், அவைதான் எமது கருத்துக்களை பிரதிபலிப்பவை. எமது கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான ஒரே ஊடகங்கள் அவை தான் ஆனால் சமூகலைத்தளங்களால் அதனை நாம் எட்டமுடியவில்லை.

மக்களிடம் கருத்துமாற்றங்களை ஏற்படுத்துவதில் அல்லது அவர்களிடம் எதிர்மறையான விடையங்களை கொண்டு செல்வதில் சமூகவலைத்தளங்கள் முன்னிலை வகிக்கின்றன. உள்ளூர் சுயாதீன ஊடகங்களுக்கு நாம் அதிக நிதி உதவிகளை செய்திருந்தோம்.

எமது ஊடகங்கள் மறுசீரமைக்கப்படவேண்டும் அதில் பல மாற்றங்களை கொண்டுவருவதுடன், பல கட்டுப்பாடுகளும் விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனேடிய அரசு நிகழ்நிலை காப்புச்சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிரகாரம் சமூகவைலத்தளங்கள் மற்றும் தேடுதல் தளங்கள் அரசுக்கு குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை தொடர்ந்து கனேடிய அரசின் செய்திகளை வெளியிடுவதை பல சமூகலைத்தளங்கள் தவிர்த்திருந்தன.