பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) – ந.மாலதி

அவுஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள சிறு தீவுகளின் ஒரு தொகுதியே பொகேயின்வில்(Bougainville) என்று அழைக்கப்படுகிறது. 28,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கு ஒரு மக்கள் தொகுதி வாழ்ந்தார்கள். பின்னர் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்னுமொரு மக்கள் தொகுதி படகுகளில் இத்தீவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்கள் தான் வீடுகளில் வளர்க்கப்படும் பலவிதமான மிருகங்களை இத்தீவிற்கு கொண்டு வந்தார்கள். 16ம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பொகேயின்வில் என்பவரே இத்தீவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். அவர் தனது பெயரை அத்தீவிற்கு சூட்டினார். பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய மற்றும் ஐ-அமெரிக்க கடலோடிகள் இத்தீவிற்கு உணவுப்பொருட்கள் பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனி இத்தீவை முற்றுகையிட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ சமயபரப்பிகள் இங்கு வந்திறங்கினார்கள்.australasia19900517 பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) - ந.மாலதி

முதலாம் உலக போரின் போது ஆவுஸ்திரேலியா  இத்தீவை முற்றுகையிட்டு தனது என பிரகடனப்படுத்தியது. இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் இத்தீவை ஒரு வருடகாலத்திற்கு கைப்பற்றி வைத்திருந்தது. 1949ம் ஆண்டு பொகேயின்வில்லும் அண்மையிலுள்ள தீவுகளும் பப்புவா நியூகினி பிரதேசமாக ஒன்றுகூட்டப்பட்டு ஐநாவால் அவுஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1960களில் பொகேயின்வில்லில் செப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 1972இல் அவுஸ்திரேலிய கம்பனி ஒன்று இங்கிருந்த செப்பு தோண்டும் வேலையை செய்தது. அக்காலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய திறந்த வெளி சுரங்கமாக இது இருந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் 20 வீதம் ப்பபுவா நியூகினி அரசுக்கு கொடுக்கப்பட்டது. இது ப்பபுவா நியூகின் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 45 வீதமாக இருந்தது.

சூழலழிவு, செப்பு வருமானம் ஒட்டுமொத்தமாக தீவுக்கு வெளியே போவது, வெளியார் பெரும்தொகையாக செப்பு சுரங்க வேலைகளுக்காக தீவுக்குள் வருவது எல்லாமே சுரங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து முரண்பாடுகளை வளர்த்தது.

1975ம் ஆண்டு ப்பபுவா நியூகினி தனிநாடாக அவுஸ்திரேலியாவால் பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சில நாட்களிலியே பொகேயின்வில் “வட சொலமன் குடியரசு” என்ற தனிநாட்டு பிரகடனம் செய்ய முயற்சித்தது. வேறெந்த நாடுகளும் இதை அங்கீகரிக்காததால், பொகேயின்வில் சில தனித்துவமான ஆட்சி உரிமைகளுடன் பப்புவா நியூகினியின் அங்கமாகியது.

ஆயுதப் போராட்டம்

1988 இலிருந்து 1998 வரை பொகேயின்வில்லில் தனிநாட்டுக்கான ஒரு தீவிர ஆயுதப்போராட்டம் பொகேயின்வில் புரட்சிகர அமைப்பினால் நடத்தப்பட்டது.

கொப்பர் சுரங்கங்களை சுற்றி முதலில் ஆரம்பித்த வன்முறைகள் தீவின் ஏனைய இடங்களுக்கும் பரவியது. செப்பு கம்பனி தனது செப்பு செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. பப்புவா நியூகினி இராணுவத்திற்கு அவுஸ்திரேலியா இராணுவ உதவிகள் வழங்கியது.

பல கிராமங்கள் தீயிடப்பட்டன. 1990ம் ஆண்டு பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொகேயின்வில்லை விட்டுவிட்டு பப்புவா நியூகினி அரசு பொகேயின்வில் இலிருந்து பின்வாங்கியது. பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் தலைவர் ஃபிரான்சிஸ் ஓனா மே 1990இல் தனிநாட்டு பிரகடனம் செய்தார். பப்புவா நியூகினி அரசு அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் தொடர்நது பொகேயின்வில் மீது பொருளாதார தடைகள் போட்டது.Francis Ona Tabloid WANI பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) - ந.மாலதி

பொகேயிவில் தனியரசு தீவெங்கும் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியததால் பல ஆயுதக்குழுக்கள் தோன்றி வன்முறைகள் அதிகரித்தன. அவற்றில் சில பப்புவா நியூகினி அரசிடமிருந்து உதவிகள் பெற்றன. 1991-1992 காலப்பகுதியில் பப்புவா நியூகினி அரசு மீண்டும் பொகேயின்வில்லின் சில பகுதிகளில் ஆட்சி செலுத்த தொடங்கிய போது மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடித்தது. இம்முறையும் பப்புவா நியூகினி இராணுவம் பல தோல்விகளை கண்டது.

அப்போதைய பப்புவா பிரதமர் சான் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யும் எண்ணத்துடன் ஒரு கூட்டம் ஒழுங்கு படுத்தினார். பொகேயின்வில் தலைவர்கள், முக்கியமாக  பொகேயின்வில் புரட்சிகர இராணுவத்தின் தலைவர் ஓனா, தமக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி இதை தவிர்த்தார்கள். எட்டப்பட்ட ஒப்பந்தம் பலனழிக்கததால், பப்புவா நியூகினி அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து மீண்டும் போரை ஆரம்பித்தது.SingSingGirlsWithFlowers பொகேயின்வில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 23; ஒரு வரலாற்றுப் பார்வை (1930-1988) - ந.மாலதி

லண்டனில் தலைமையகத்தை கொண்டு இயங்கும் சன்ட்லைன் என்ற கம்பனியை 1997 இல் போரில் ஈடுபட பப்புவா நியகினி பிரதமர் சான் அமர்த்தினார். இதற்கு பல எதிர்ப்புகள் உருவானதால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

போர்நிறுத்தம்

போர் நடந்த ஒன்பது ஆண்டுகளில் 4,000 முதல் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இது இந்த பொகேயின்வில் தேசத்தின் மக்கள்தொகையில் 3% முதல் 13% வரை இருக்கும்.

பதவியேற்ற புதிய பிரதமர் இராணுவ தீர்வை எதிர்த்தார். நியூசிலாந்தில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் உருவானது. அதை கண்காணிக்க நியூசிலாந்து ஆவுஸ்திரேலிய குழு ஒன்று அமர்த்தப்பட்டது. தொடர்ந்த முரண்பாடுகள் பலவற்றை தாண்டி 2001 இல் சமாதான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2019 இல் ஒரு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு தான் நவம்பர் 23ம் திகதி ஆரம்பிக்கிறது. அதன் முடிவு டிசம்பர் மாத இறுதியில்தான் வெளியாகும்.