பைடனின் வெற்றியை முதல்முறையாக  அங்கீகரித்த ட்ரம்ப்

379 Views

அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக  அங்கீகரித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். 

கடந்த 3ம்  திகதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆட்சி அமைக்க 270 இடங்களே போதுமானது என்ற போதிலும் ஜனநாயகக் கட்சி 306 இடங்களில் வென்றுள்ளது.  இதன் காரணமாக  அதிகாரபூர்வ வெற்றி வேட்பாளராக பைடன்  உள்ளார்.

இந்நிலையில்,தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என ட்விட்டர் பதிவு ஒன்றில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், தேர்தலில் முறைகேடு நடந்தது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை மீண்டும் அவர் கூறி உள்ளார்.

இந்த தேர்தலுக்கு எதிராக முக்கிய மாகாணங்களில் ட்ரம்ப் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் முறைகேடு நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

தேர்தல் மிக நேர்மையாக நடந்தது என்றும், வாக்காளர்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை பைடனின் வெற்றியை அங்கீகரிக்காமல் இருந்த ட்ரம்ப் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Reply