பெற்ற பிள்ளைகளையே தூக்கிலிட்ட தாய்! தாயும் பிள்ளையும் பலி

கொஸ்லாந்தை கம்பஹா பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு குழந்தையின் உயிரை மாத்திரமே காப்பாற்ற முடிந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஒன்றரை வயதுடைய மற்றுமொரு குழந்தை வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்ச்சிக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், கொஸ்லாந்தை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.