பெற்றோர் பெற்ற கடன்: 70 ஆண்டுக்கால அடிமை வாழ்வு

527 Views
1500 ரூபாய்க்கும் குறைவான ஒரு தொகையை கடனாகப் பெற்றதற்காக, சுமார் 7 தசாப்தங்களாக (70 ஆண்டுகளாக) அடிமைத் தொழிலாளியாக ஒருவர் இந்தியாவில் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.
இன்று சுமார் 70+ வயது ஆகும் அவர், ‘இனி ஒரு நாள் கூட தன்னால் அடிமையாக வாழ முடியாது’ என்ற வேதனை மிகுந்த வார்த்தைகள் தெரிவித்திருக்கிறார்.
அவர் தற்போது மீட்கப்பட்டுள்ள போதிலும், இந்த கொத்தடிமைத்தன முறை இன்றைய கொரோனா பெருந்தொற்று சூழலிலும் கூட கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த பெருந்தொற்று நவீன அடிமைத்தன முறையை மேலும் பெருக்குமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. ஐ.நா.வின் கணக்கப்படி, சுமார் 40 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தன முறையில் பாதிக்கப்பட்டவர்களாக அறியப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தனியார் துறைகளிடம் சிக்கி கட்டாய உழைப்புக்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர்.

Leave a Reply