பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. தம்பலகாமம் பிரதேச பகுதியில் உள்ள மயில் தீவு 6ம் வாய்க்கால் வயல் நிலப்பகுதிகளிலும் உழுதுதல் முதல் விதைப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்றுவருகின்றன.
விதைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தி இயந்திரம் மூலமாக உழுதுதலை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சிறுபோகத்தின் போது பசளையின்மையாலும் கால தாமதமாக பசளை கிடைத்ததாலும் விளைச்சல் குறைவாக காணப்பட்டது இருந்த போதிலும் இம் முறை பெரும்போகச் செய்கைக்காவது பசளையை நேரகாலத்தோடு தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த இப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.