நிபந்தனைகள் இல்லாது ஹமாஸ் எல்லா பணயக்கைதிகளையும் விடுவித்த பின்னர் சரணடைந்தால் தரைத்தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் ஜெனார்தன் கொன்றிகஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாது விட்டால் காசாவுக்குள் இஸ்ரேலிய படையினர் புகுந்து அதனை செய்வார்கள் என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் 5000 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 29 ஐ.நா பணியாளர்களும், 37 வைத்திய பணியாளர்களும், 19 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 1900 இற்கு மேற்பட்டவர்கள் சிறுவர்கள் எனவும், 140000 வீடுகள் அழிக்கபட்டுள்ளதாகவும், தினமும் அங்கு 350 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்படுவதாகவும் அது மேலும் தெரிவத்துள்ளது. இதனிடையெ பல ஆயிரம் மக்கள் வடக்கு காசா பகுதிக்கு மீண்டும் திரும்பிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே வடக்கு சாசா பகுதியில் உள்ள ஜபலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.