பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்- ரிட் மனு மீது இன்று விசாரணை

610 Views

பெருந்தோட்ட தொழிலாளர்களின், 1000 ரூபாய் நாளாந்த ஊதிய அதிகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று   விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த வர்த்தமானியை செயலிழக்க செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட கம்பனிகள் ஒன்றிணைந்தே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

இதில் பிரதிவாதிகளாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர, தொழிலமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, உள்ளிட்ட 18 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply