புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து ஆராய்ந்து வருகின்றோம் – சுமந்திரன்

521 Views

இலங்கை அரசால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும், 300 இற்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில் –

“இந்த விடயம் குறித்து அறிந்துள்ளோம். இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயமே. இது குறித்து விரைவில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம்” என்றார்.

Leave a Reply