புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

வங்களா விரிகுடாவில் உருவாகிய ‘புரெவி’ புயல் காரணமாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

IMG 4335 புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

புரெவி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

3a10ea9e 233a 4f0c 8906 c8f24cb9c68b புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

அத்துடன் நெடுங்கேணியில் உள்ள கிராமிய கூட்டுறவு வங்கிக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளமையால் உத்தியோகத்ர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

1c1d8b47 7fc5 49c8 8a85 4826346a70dc புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்துவருகின்றனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்திலுள்ள  ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக   மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3045பேர்  நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

batti 2 புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றுள்ளமையினாலும், வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளமையினாலும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் காற்று மற்றும் மழை காரணமாக தலைமன்னார் ஊர்மனை, தலை மன்னார் பியர், பேசாலை, விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களிலுள்ள மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த புயல் தாக்கத்தினால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு உட்பட கடற்றொழில் உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ve புரெவி புயல்- நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

அதே நேரம் யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக மழை வீழ்ச்சி இடம்பெறுவதால் சில பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவி்க்கின்றன. யாழ். நல்லூர் பகுதி ஒன்றில் வெள்ள நீர் நிரம்பி நிற்பதைப் படத்தில் காணலாம்.