புதிய பயங்கரவாத சட்ட மூலம் நாட்டிற்கு உகந்ததல்ல-அனந்தி சசிதரன்

புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்  நாட்டிற்கு உகந்ததல்ல அதே நேரம் சர்வதேசத்திற்கு  இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான  அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

பண்ணாகத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உருவக மாற்றங்கள் செய்து எந்த ஒரு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச் சட்ட போர்வையில் கொண்டு வந்தாலும் ஜனநாயகரீதியாக போராடும் இந்த மக்களை அடக்குகின்ற ஒடுக்குகின்ற ஒரு சட்ட மூலமாக இது காணப்படுகின்றது என்ற அச்சம் பொதுமக்களுக்கு நிலவுகின்றது.

இந்த நிலையில் நாளைய தினம் வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்தாலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகமாக நாங்கள் பூரண ஆதரவினை இந்த ஹர்த்தால் அனுஷ்டிப்பிற்கு வழங்குகின்றோம்.

நாளைய வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு ஒருமித்து ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.