திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்தில் மோதுண்டு ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் (17)இரவு இடம் பெற்றுள்ளது திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் இல 845/10,முள்ளிப்பொத்தானை எனும் முகவரியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான தாவூது சலீம் என்பவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குடிபோதையில் மூவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது உயிரிழந்தவர் தண்டவாளத்தில் உறங்கியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் இன்று (18)ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.