முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரை சிவனேசதுரை சந்திரகாந்தனை அமைச்சர் பதவியை ஏற்குமாறும் நாளை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்டம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. எனினும் பிள்ளையானிற்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
பிள்ளையான் சிறையிலிருந்தபடி பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே இந்த அழைப்பு அரசாஙகத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை பதவியேற்பு நிகழ்வில் பிள்ளையான் கலந்துகொள்வதற்கான நீதித்துறையின் அனுமதியை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.