பிரித்தானியாவில் மாணவர்கள் சென்ற பேரூந்து கவிழ்ந்தது

கடந்த வெள்ளிக்கிழமை(29) காலை பிரித்தானியாவில் உள்ளLiverpool க்கு அருகில் M53 இல் இடம்பெற்ற பயங்கர பேரூந்து விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவியும்,பஸ் சாரதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக Merseyside காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

bus liverpool பிரித்தானியாவில் மாணவர்கள் சென்ற பேரூந்து கவிழ்ந்ததுகார் மீது பேரூந்து மோதி பக்கவாட்டில் கவிழ்ந்ததில் விபத்து நடந்தது.14 வயதுடைய பாடசாலை மாணவியும், பேரூந்து சாரதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.என்று இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் போலீசார் தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும் 50 குழந்தைகள் அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்,அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் மீதமுள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.