பிரித்தானியாவில் பணத்திற்கு வதிவிடம் அனுமதி? உள்துறை அலுவலக ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

unnamed பிரித்தானியாவில் பணத்திற்கு வதிவிடம் அனுமதி? உள்துறை அலுவலக ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய வதிவிட உரிமத்தை விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு தனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 2,000 பவுண்ட் கேட்டதாகக் கூறப்படுகிறது.2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த பணியாளர் அந்த நபரைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் மோசடி முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியமான உள்துறை அலுவலகப் பதிவுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் பணியாளர் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வட அயர்லாந்தில் வசித்துவரும் வெளிநாட்டவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர், தான் உள்துறை அலுவலகத்தில் பணி செய்வதாகவும், விண்ணப்பத்தைப் பார்த்ததாகவும் விபரமாகக் கூறியுள்ளார்.

உங்களை போன்றவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு அகதி நிலை கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், உங்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும். நீங்கள் எனக்கு 2,000 பவுண்டுகள் கொடுத்தால், உங்களுக்கு வதிவிட வசதி கிடைக்க உதவி செய்கிறேன் என கூறியுள்ளார்.புகலிடக் கோரிக்கையாளர், முன்னர் ஊடகத்துறையில் பணியாற்றியவர். இது ஏதேனும் மோசடியாக இருக்குமோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர் தனது சட்டத்தரணியை அழைத்து விடயத்தைக் கூற, அடுத்த முறை அந்த உள்துறை அலுவலக அலுவலர் வீடியோ காலில் அழைக்கும்போது, அவரது அழைப்பை பதிவுசெய்துள்ளார்கள்.

அந்த ஆதாரத்துடன், அவரது சட்டத்தரணி பொலிஸாருக்கு தகவலளிக்க, அந்த உள்துறை அலுவலக அலுவலர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குடியேற்றக் குற்றம், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக டஜன் கணக்கான உள்துறை அலுவலக ஊழியர்கள் தற்போது குற்றவியல் விசாரணையில் உள்ளனர் என்பதை புதிய தகவல் சுதந்திர புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.