தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலையை உலக நாடுகள் தலையிட்டு சிறிலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை” ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 29 ஜனவரி 2020 புதன்கிழமை அன்று 4 மணியிலிருந்து 7 மணி வரை10 Downing street, Westminster SW1A 2AAயில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டமானது தமிழ் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பழைய மாணவர் சங்கங்கள்இ ஊர் சங்கங்கள், திருக்கோயில் அமைப்புக்கள், தமிழ் பாடசாலைகள் உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தாமதிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.
இது வரை ஸ்ரீலங்கா இனவாத அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி சர்வதேசத்திடம் நீதி கோருமாறு வேண்டுகின்றோம்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF): 07508 365678; 0208 808 0465
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE): 0207 193 6655
தமிழ் தகவல் நடுவம் (TIC): 0208 546 1560