தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26) பிரான்ஸ் தலைநகர் பரிஸ் இல் தமிழர்கள் ஒன்றுகூடும் இடமான லாச்செப்பல் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிர்நீத்த 1987ஆம் ஆண்டின் காலை 10.48 மணியை மீள் நினைவுபடுத்தி சரியாக 10.48 மணிக்கு ஈகைச்சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், பிரான்ஸ் மக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலத்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு மாலை 5.00 மணிவரை நடைபெற்றதுடன், தியாகதீபம் திலீபனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பினை பிரான்ஸ் மொழியில் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.