பிரதமர் மோடி தமிழகம் வருகை – ட்விட்டரில் ரெண்டாகும் #GoBackModi

556 Views

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி  செல்கின்றார்.

இதையடுத்து வழக்கம்போலவே இன்றும் #GoBackModi என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் சமூக ஊடகத்தில் ரெண்ட் ஆகி வருகிறது.

இன்று  கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்கிறார்,

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ள இடங்களில் ஒன்றாக பாலக்காடு கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது.

அதே போல் தாராபுரம்   தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்யவுள்ளார் மோடி.  இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதைத் தொடர்ந்து  புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக  பிரசாரம் மேற்கொள்கின்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் வழக்கம்போலவே இன்றும் #GoBackModi என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் சமூக ஊடகத்தில் ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு எதிராக நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் #TNWithPMModi என்ற ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply