நாடாளுமன்றம் நாளை கூடும் போது கறுப்பு ஆடையுடன் தமிழ் எம்.பி.க்கள் வருவர்

நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடையுடன் செல்ல தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த முடிவை எடுத்தனர். கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள் கறுப்பு ஆடை அணிந்து வந்த சமயத்தில், அதை பார்த்த தமிழ் எம்.பிக்கள், அன்றைய தினமே இந்த முடிவை எடுத்தனர்.

அன்றைய தினமே கூட்டமைப்பு எம்.பி சிறிதரன், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த யோசனையை சொல்ல, ஏனையவர்கள் அதை ஆமோதித்தனர். அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாரும் தடுக்க முடியாத விதத்தில் அஞ்சலி செலுத்துவோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது