பாதாள உலக குழுக்களில் இராணுவத்தினர் – 25 ஆயிரம் படையினர் குறித்து தகவல் இல்லையாம்

மேல், தென் மாகாணங்களில் நடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தாக்குதல்களில் துப்பாக்கிதாரிகள், மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களாக பணிக்கு திரும்பாத இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐந்து வருடத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் இராணுவத்துக்கு திரும்பவில்லை. இவர்கள் விடுமுறை எதுவும் பெறாமல் பணியிலிருந்து விலகிஉள்ளனர்.

எவ்வாறாயினும், இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பாதாள உலகக் குழுவில் இணைதல் தொடர்பில் இராணுவத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வூட்டும் செயல்கள் இராணுவ பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பில், 41 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின ருக்கு இது குறித்து இராணுவ பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, இராணுவத்திலிருந்து தாமாக விலகியவர்களுக்காக எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக நீடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது