உலகில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்

430 Views

உலகின் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைனின்(Bahrain’s ) இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா ( PM Khalifa bin Salman Al Khalifa) காலமானார் என அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர், காலமானதாக, அந்நாட்டு அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 84.
பஹ்ரைன் பிரதமர் காலமானதையடுத்து, ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply