பரிந்துரைகளை நிறைவேற்றாவிட்டால் சுயாதீன பொறிமுறை அமைக்கப்படும் – மன்னிப்புச் சபை

760 Views

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அந்தச் சபை வலியுறுத்தியுள்ளது. அதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையால் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையயான்று நிறுவப்படக்கூடும் என்றும் அந்தச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 46/1 தீர்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிக முக்கியமான முன்நகர்வு என தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் இந்தத் தீர்மானத்தின் ஊடாக சர்வதேசத்தின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்தச் சபை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் திரட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த காலத்தில் இடம்பெற்ற மற்றும் தற்போது இடம்பெறும் மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ந்தும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்ற சமிக்ஞை இந்தத் தீர்மானத்தின் ஊடாக தெளிவாக வெளிப் படுத்தப்பட வேண்டும் என அந்தச் சபை வலி றுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங் கையின் மனித உரிமை நிலைவரங்கள் கண்காணிக்கப்படுவதுடன், கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply