பயணிகள் விமானங்கள் இலங்கை நுழைய 10 நாட்களுக்குத் தடை – சரக்கு விமானங்கள் வரும்

326 Views

இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் விமானங்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்படவுள்ளது எனச் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துக்கள் முன்னெடுக்கப்படும் எனவும், சரக்கு விமானங்களின் சேவைகளும் தொடரும் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply