பயங்கரவாத முடியடிப்புப் பிரிவால் லண்டனில் நான்கு இலங்கையர் கைது

782 Views

தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் பயங்கரவாத சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

35 வயது பெண், 39,35 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு பேரும் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைதான மேற்படி பெண் நவம்பர் மாதம் பிணையில் செல்வதற்கு அனுமதி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply